ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் அருகே உக்குநகர் பகுதியில் விருமன் பட பாணியில் ஒரு வாலிபர் தன்னுடைய காதலியை பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்து கட்டி அணைத்தபடி சாலையில் சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அவ்வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட காதல் ஜோடிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதன் பிறகு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பைக்கில் கட்டி அணைத்தபடி சென்ற காதல் ஜோடி அஜய் குமார் (22) மற்றும் கே. சைலஜா (19) என்பது தெரிய வந்தது. இவர்களை காவல்துறையினர் கைது செய்ததோடு பைக்கையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட காதல் ஜோடிகளின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக அஜய்குமார் மற்றும் சைலஜாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
విశాఖలో లవర్స్ ఓవర్ యాక్షన్. స్టీల్ ప్లాంట్ మెయిన్ రోడ్డుపై పట్టపగలు బరితెగింపు. హెల్మెట్ లేకుండా యువకుడు డ్రైవింగ్. కాలేజ్ యూనిఫామ్ ధరించి విద్యార్థిని వికృత చేష్టలు చూసి నివ్వెరపోయిన స్థానికులు. #AndhraPradesh #Visakhapatnam #Vizag pic.twitter.com/i2dGgHKElg
— Vizag News Man (@VizagNewsman) December 29, 2022