ஊருக்குள் புகுந்த காட்டு யானை வீடுகளை சேதப்படுத்துவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் தொரப்பள்ளி பகுதிக்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த காட்டு யானை பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டு உள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் ஜார்ஜ் என்பவரின் வீட்டை உடைத்து காட்டு யானை அரிசி போன்ற உணவு பொருட்களை எடுத்து சென்று அட்டகாசம் செய்துள்ளது. இதுகுறித்து உடனடியாக கூடலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டு யானையை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது காட்டு யானைகள் தொரப்பள்ளி பகுதிக்குள் இருக்கும் வீடுகளை உடைத்து உணவுப்பொருட்களை திண்று பழகிவிட்டதால் அடிக்கடி ஊருக்குள் நுழைகின்றன. இவ்வாறு ஊருக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் யானைகளால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க அரசு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.