நடிகர் விக்ரம் நன்றி கூறி சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.
இந்த படத்தின் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விக்ரம் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்புக்காக நன்றி கூறி வீடியோ ஒன்றை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CjKimWVhS1P/