Categories
சினிமா தமிழ் சினிமா

“மோசடி மன்னனிடம் பரிசு பொருள் பெற்ற பிரபல நடிகை” வங்கதேசத்தில் நடன நிகழ்ச்சிக்கு தடை…. காரணம் என்ன…..?

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நேரா பதேகி. இவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசு பொருட்களை வாங்கியவர். மொரோக்கோ மற்றும் கனடா வம்சா வழியைச் சேர்ந்த நேரா கடந்த 2014-ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் வங்காள தேசத்தில் பெண்கள் லீடர்ஷிப் கார்ப்பரேஷன் என்ற அமைப்பு நடிகை நேராவின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் திடீரென அந்நாட்டு அரசு நேராவின் நடன நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு கலாச்சாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அன்னிய செலவாணியை போதுமான அளவு பாதுகாக்க வேண்டிய சூழல் தற்போது இருக்கிறது. நடிகை நேரா  நடனமாடினால் அவருக்கு சம்பளமாக அமெரிக்க டாலர்கள் கொடுக்க வேண்டி இருக்கும். அப்படி கொடுக்கும் பட்சத்தில் ஏற்கனவே இருக்கும் டாலரின் மதிப்பு குறைந்து விடும். மேலும் உலக அளவில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அன்னிய செலவாணி கையிருப்பை பராமரிப்பதற்காக நேராவின் நடனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |