நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும்.நிலையில், நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது.
அதன் பிறகு துணிவு படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த வீரம் எனும் ஹோட்டலின் உரிமையாளர் நடிகர் அஜித்திற்கு சிலை வைத்துள்ளார். மேலும் நடிகர் அஜித்துக்காக வைக்கப்பட்ட சிலையின் புகைப்படம் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Theni chinnamanur veeram restaurant owner make #Ajithkumar 👑 Statue #Thunivu #ChillaChilla pic.twitter.com/7SFI4nf9q5
— AJITH FANS THENI (@AjithFCTheni) December 10, 2022