நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் பாடலை மூதாட்டி ஒருவர் பாடும் அழகான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வயதான மூதாட்டி ஒருவர் தன்னுடைய மெல்லிய குரலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த இருவர் உள்ளம் படத்தில் வரும் “கண்ணெதிரே தோன்றினாள்” என்ற பாடலை கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் பாடி அசத்தியிருக்கிறார். இவருடைய இந்த பாடல் பாடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் இவரது குரல் எம்.எஸ் ஜானகி குரலோடு ஒத்துக் காணப்படுகிறது என்றும் நெட்டிசன்கள் பலர் கூறியுள்ளனர். இந்த வயதில் இவ்வளவு அழகாக பாடும் இந்த பாட்டிக்கு உரிய நேரத்தில் வாய்ப்பு கிடைத்திருந்தால் தற்போது பெரிய பாடகியாக வலம் வந்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த தாயார் , நடிகர்திலகம் நடித்த இருவர் உள்ளம் திரைப்படத்தில் வரும், கண் எதிரே தோன்றினாள் என்ற பாடலை, பிசிரில்லாமல் எவ்வளவு ரசித்து பாடுகிறார். இதுபோல ரசிகர்கள் ரசிகர்கள் அவருக்கு மட்டுமே உள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயம். வளர்க அவர் புகழ்.. pic.twitter.com/myY99F3RqN
— Sivaji VC Ganesan – God's Own Son. (@SivajiVCGanesan) December 3, 2020