Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொள்முதல் செய்ய தாமதம்…. மழையால் முளைக்க தொடங்கும் நெல்…. வேதனையில் விவசாயிகள்….!!

விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய தாமதமானதால் மழையால் நெல் முளைக்க தொடங்கி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகில் வாகைக்குளம் கிராமத்தில் நெல் கொள்முதல் மையம் உள்ளது. இந்த கொள்முதல் மையத்தை சுற்றி உள்ள சின்ன வாகைகுளம், பெரிய வாகைகுளம், அழகுசிறை போன்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். அவர்கள் சாகுபடி செய்யும் நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வார்கள். இந்த கொள்முதல் மையமானது வழக்கம்போல் கோடைகாலம் மற்றும் மழை காலங்களில் நெல்லை கொள்முதல் செய்கிறது. மேலும் இந்த மையத்தில் விவசாயிகளிடமிருந்து மொத்தம் 34 ஆயிரம் டன் நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அளித்துள்ளது.

ஆனால் 14 ஆயிரம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 20 ஆயிரம் டன் கொள்முதல் செய்யாமலேயே நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல் மையத்தின் அருகிலேயே குவித்து வைத்துள்ளனர். மேலும் மழை பெய்ததால் குவித்து வைத்த நெல் முளைக்க தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |