Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லை அருகே சோகம்”…. சாலை விபத்தில் தந்தை, மகள் பரிதாப பலி.!!

 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மில்டன் ஜெயக்குமார் என்பவர் தீயணைப்பு நிலைய அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இவரும் இவரது மகளான ரெனி லாரோசும்  காரில் சேலத்திற்கு சென்று விட்டு பின் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.அப்போது வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்து கொண்டிருந்த நிலையில்  கேரளாவிலிருந்து வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது.

Image result for road accident

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த தந்தையும் மகளும்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தகவல் அறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அவர்கள் இருவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |