Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் சண்டை… குழந்தையை ஓங்கி தரையில் அடித்த கொடூர தந்தை… பதறவைக்கும் சம்பவம்..!!

குடும்பத் தகராறில் தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி தரையில் அடித்த  கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், வைப்பூர் அருகேயுள்ள திருவாதிரை மங்கலத்தைச் சேர்ந்தவர் பாரதி மோகன் (வயது 27).. இவருடைய மனைவி வேம்பு (வயது 23).. இவர்கள் இருவருமே வாய் பேச முடியாதவர்கள். தினமும் கூலி வேலைக்குச் சென்று தான் குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது.. இவர்களுக்கு பாவேந்தன் எனும் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஓன்று  உள்ளது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக கணவன் மற்றும் மனைவி இருவருக்குமிடையே தொடர்ந்து குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.. இதனால் வேம்பு கோபித்துக் கொண்டு தன்னுடைய தாயார் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், உறவினர்கள் அவரிடம் பேசி சமாதானப்படுத்தி இருவரையும் ஒன்று சேர்த்து வைத்துள்ளனர்.

இந்தநிலையில், நேற்று காலை இருவருக்குமிடையே வழக்கம்போல் குடும்பத் தகராறு ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த பாரதி மோகன் தனது அருகில் தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய குழந்தையை தூக்கி தரையில் ஓங்கி எறிந்துள்ளார். இதனையறிந்த அக்கம், பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்த குழந்தையை உடனடியாக மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வைப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாரதி மோகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |