பிரித்தானியாவில் உள்ள Gloucestershire என்ற பகுதி அருகே கிராமம் ஒன்றில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள Gloucestershire என்ற பகுதி அருகே உள்ள Tewkesbury என்ற கிராமப்பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தையான Matthew Boorman (43) என்பவர் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அந்த சம்பவத்தில் மற்றொரு நபர் ஆபத்தான நிலையில் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே சம்பவ இடத்திலிருந்து காலில் காயங்களுடன் பெண் ஒருவரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் காவல்துறையினர் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த கொலைவெறி தாக்குதல் அமைதியான குடியிருப்பு பகுதியில் நடந்துள்ளதால் அங்குள்ள மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேசமயம் Matthew Boorman-ன் இறப்பு அவருடைய குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.