தென் மாவட்ட ரயில்கள் வருகிற 15-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ரயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் மதுரை கோட்டத்தில் 20 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில ரயில்கள் வருகிற 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த ரயில்கள் அனைத்தும் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரையிலும் மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் ரயில் வருகிற 16-ஆம் தேதி வரை வரையிலும் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் சென்னையில் இருந்து மதுரை வழியாக திருச்செந்தூர் வரை இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 15-ஆம் தேதி வரை வரையிலும் மருமார்கத்தில் திருச்செந்தூரில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் ரயில் வருகிற 16-ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யபட்டுள்ளது.