Categories
உலக செய்திகள்

மோதலில் ஈடுபட்ட 2 கால்பந்து அணியின் ரசிகர்கள்…. போலீசாரால் குண்டுக்கட்டாக தூக்கப்பட்ட நபர்…. வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ….!!

இரண்டு கால்பந்து அணியின் ரசிகர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் போலீசார் ஒருவரை குண்டுகட்டாக தூக்கி வந்து சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் வடமேற்கு பகுதியில் மான்செஸ்டர் நகரில் நேற்று இரண்டு அணிகளுக்கு இடையில் கால்பந்து போட்டி நடக்கவிருந்தது. ஆனால் போட்டி நடக்கும் முன்னரே இரண்டு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கலவரமானதை அடுத்து போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக அந்த பகுதியில் old tafford மைதானத்துக்கு மான்செஸ்டர் பெருநகரப் போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு ரசிகரை பிடித்து போலீசார் குண்டுகட்டாக தூக்கி வந்து தனியாக வைத்து அடித்து உதைத்துள்ளனர். இதில் ஒரு போலீஸ் மட்டும் அந்த நபரை ஐந்து முறை வயிற்றில் பலமாக குத்தியுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தையும் அப்பகுதியில் உள்ள lowry தங்கும் விடுதியில் இருந்து ஒருவர் தனது கேமராவில் படம்பிடித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தினை அப்பகுதியில் உள்ள அனைவரும் தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கூறியதாவது “அந்த நபர் தற்போது தங்களின் பிடியில் தான் இருக்கிறார். அவர் வாகன திருட்டு மற்றும் பொது ஒழுங்கு குற்றத்தின் கீழ் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கலவரத்தில் பல காவல்துறையினர் ரசிகர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு போலீசார் கடுமையாக காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |