சுகந்தலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல்வேறு பனை மற்றும் தென்னை மரங்கள் எரிந்து நாசமாகின.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியில் சுகந்தலை என்ற சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. வறண்ட குளத்தின் காய்ந்து கிடந்த அமலைச்செடிகளில் 2 மணியளவில் மர்மநபர் யாரோ தீ வைத்ததாக சொல்லப்படுகின்றது.காற்றின் வேகம் அதிகரித்த காரணத்தால் தீ மளமள வென பரவியது.
சுற்றியுள்ள தென்னை , பனை மரங்களில் பரவிய தீ ஊரின் நடுவே இருக்கும் அம்மன் கோவிலை சூழ்ந்தது. அருகில் இருந்த வீடுகளுக்கு பரவி விடுமோ என்ற அச்சத்தில் பதறிப்போன ஊர் மக்கள் , இளைஞர்கள் வேகமாக தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீயின் வேகம் அதிகரித்து கட்டுப்படுத்த முடியாமல் திணறியதால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்ப இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் , ஊர் மக்களின் துணையுடன் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 3 மணி நேரம் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் ஊர் முழுவதும் புகை மண்டலமாக மாறியது.இந்த தீ விபத்தில் ஏராளமான பனைமரங்கள் மற்றும் தென்னை மரங்கள் எரிந்து கருகின.
துரதிஷ்ட வசமாக ஏற்பட்ட இந்த தீ விபத்தால் எவ்வித உயிர் சேதமும் ஏற்பட வில்லை. பட்டப்பகலில் ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இதற்க்கு முன்பு இதே சுகந்தலை ஊரின் தெற்கே , மேற்கே என 3 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கு காரணம் யார் என்று ஊர் பெரியவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
செய்தி ஆசிரியர் : V.பாலமுருகன் ( செய்திசோலை )
தொடர்ந்து இணைந்திருங்கள் செய்திச்சோலையுடன் …..