குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி விட்டது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் வடக்கு பகுதியில் தங்கதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவரின் கடைக்கு எதிர்ப்புறமே பொருட்கள் வைக்கும் குடோன் அமைத்துள்ளார். இந்நிலையில் இந்த குடோனில் திடீரென தீப்பற்றி மளமளவென எரிய ஆரம்பித்துள்ளது.
இந்த விபத்தில் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.