கொரோனா நிதி நிவாரணத்திற்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் 1000 ரூபாய் இணையதளம் மூலம் செலுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்வண்ணம் தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புகின்றனர்.
இதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரங்கசாமி குளம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஹித் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் தனது சேமிப்பிலிருந்து 1000 ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இணையதளத்தின் மூலம் செலுத்தியுள்ளார். மேலும் 1-ஆம் வகுப்பு படிக்கின்ற சிறுவன் ரோஹித்தின் மனநேயத்தை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.