Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட தகராறு…. வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள்…. கம்பியால் தாக்கப்பட்ட மீனவன்…. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள்….!!

மீன் பிடிக்கும் தொழிலில் ஏற்பட்ட தகராறில் மீனவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் கிராமத்தில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வந்தார். இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுகந்தன் என்பவருக்கும் மீன்பிடிக்கும் தொழில் தொடர்பாக கடல்பகுதியில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 8ஆம் தேதி தனது வீட்டில் தமிழ்வாணன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உள்ளே புகுந்த சுகந்தனும் மர்ம நபர்களும் தமிழ்வாணனை கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் தமிழ்வாணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் தமிழ்வாணனை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்வாணனின் இறந்த செய்தியை கேட்டதும் அவரது உறவினர்களும் கிராம மக்களும் காவல் நிலையம் முன்பு திரண்டு கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |