தூய்மை பணியாளர்களுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான பலசரக்கு மற்றும் காய்கறி பொருட்களை இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா வழங்கியுள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பேரூராட்சியில் பணிபுரியக்கூடிய 60 துப்புரவு பணியாளர்களுக்கு முழு ஊரடங்கின் காரணமாக ஒரு வாரத்துக்கு தேவையான பலசரக்கு மற்றும் காய்கறி பொருட்களை சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா வழங்கியுள்ளார். மேலும் இதில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், தலைமை காவலர் கவிதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாண்டையார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதில் கலந்துகொண்ட அனைவரும் தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கும் போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கை உரையை அணிய வேண்டும் போன்ற அறிவுரைகளை வழங்கியுள்ளனர். மேலும் பேரூராட்சியின் தூய்மை பணி மேற்பார்வையாளர் திலீபன் சக்கரவர்த்தி நன்றி கூறியுள்ளார்.