தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்திற்கு வரும் பணியாளர்கள் கை கழுவுவதற்காக காலால் இயக்கும் தண்ணீர் குழாய்களை அமைத்து உள்ளார்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் தொற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ளக் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதாரமாக இருத்தல் வேண்டும். இந்நிலையில் தலைமைச் செயலகத்திற்கு வரும் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
அதாவது தலைமை செயலகத்தில் முக்கிய வாயில்களில் காலால் இயக்கும் தண்ணீர் குழாய்களை அமைத்து கைகளை சுத்திகரிப்பான் உபயோகித்து கழுவிச் செல்லும் வசதியை தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் பரவி வரும் கொடிய தொற்றிலிருந்து அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவி சுகாதாரமாக இருக்கவேண்டும் என தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இந்த தண்ணீர் குழாய்க்கு பக்கத்தில் சானிடைசர் மற்றும் சோப்பு பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறாக நோய் தொற்றை ஒழிப்பதற்காக தமிழக முதலமைச்சர் மேற்கொண்டுள்ள இந்த புதிய முயற்சியை அனைவரும் பாராட்டியுள்ளனர்.