Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முன்னாள் மேயர் வீட்டில் பணிபுரிந்த செக்யூரிட்டி மாரடைப்பால் மரணம்..!

முன்னாள் மேயர் வீட்டில் செக்யூரிட்டியாக பணிபுரிந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் இறந்துள்ளாரா? எனப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை நந்தனம் கிழக்கு சிஐடி நகரில் வசித்துவரும் 55 வயதுடைய ராஜேந்திரன் என்பவர் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் வீட்டில் செக்யூரிட்டியாக  வேலைபார்த்து வந்தார்.. இந்தநிலையில் தான் நேற்று இரவு ராஜேந்திரன் தன்னுடைய  வீட்டில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைப்பார்த்த அவரது வீட்டிலுள்ளவர்கள்  ராஜேந்திரனை உடனடியாக மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்..

அங்கு அவரைப் பரிசோதனை செய்துபார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.. பின்னர், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சைதாப்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, ராஜேந்திரன் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இறந்துள்ளாரா? என பரிசோதனை செய்வதற்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Categories

Tech |