பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். இவர் நடித்துள்ள உஞ்சை திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவர் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று தன்னுடைய பங்களாவுக்கு வெளியே ரசிகர்களை சந்திப்பார். இப்படி ரசிகர்களை சந்திக்கும்போது தன்னை பாதித்த ஒரு விஷயம் குறித்து அமிதாப் பச்சன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, என்னுடைய தீவீர ரசிகரான ஒரு 4 வயது சிறுவன் பாதுகாப்பை மீறி என்னிடம் ஓடி வந்து கண்ணீர் விட்டு காலில் விழுந்தான். அதன்பிறகு தான் வரைந்த ஓவியத்தை என்னிடம் காண்பித்து அதில் ஆட்டோகிராப் வாங்கியதோடு, அவனது தந்தை எழுதிய கடிதத்தையும் வாசித்துக் காண்பித்தார். என்னுடைய நலம் விரும்பிகளின் உணர்வுகள் இப்படித்தான் இருக்கும். மேலும் நான் தனிமையில் இருக்கும்போது இதெல்லாம் எதற்காக, ஏன் இப்ப,டி என்றெல்லாம் என்னிடம் நானே கேட்டுக் கொள்வேன் என்று பதிவிட்டுள்ளார்.