கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ கோர தாண்டவம் ஆடிவருகிறது. இதில், பல மில்லியன் ஹெக்டேர் நிலங்கள், நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பல் ஆகின. அதுமட்டுமின்றி கோலா கரடிகள் உட்பட பல விலங்குகளின் உயிரையும் காட்டுத் தீ பறித்துள்ளது.
இந்நிலையில், தாய் கரடியை காணாமல் தேடி அலையும் குட்டி கோலா கரடிகளுக்கு நரி பாலூட்டும் காணொலி வீடியோவை ஒருவர் பதிவிட்டதைத் தொடர்ந்து தற்போது அந்த பதிவு வைரலாகியுள்ளது.
இதுகுறித்து அவர் , “ஆஸ்திரேலியா காட்டுத் தீயில் குட்டிகள் தங்கள் தாயை இழந்துவிட்டன. அதேபோல், பல தாய் விலங்குகள் தங்கள் குழந்தைகளை இழந்துவிட்டன. இது மனிதநேயத்தின் சிறந்த எடுத்துக்காட்டு” என்று பதிவிட்டார். தற்போது, இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
https://twitter.com/adarshhgd/status/1220931047782666240