Categories
உலக செய்திகள்

எவ்வளோ பெருசு…. ஒரு மனித குழந்தையின் அளவு…. கிராமத்தில் உலாவும் ராட்சத தவளை….!!

ஒரு மனித குழந்தையின் அளவு கொண்ட ராட்சத தவளையை சாலமன் தீவு மக்கள் பிடித்துள்ளனர்.

சாலமோன் தீவில் வாழும் மக்கள் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவது வழக்கம். அவ்வாறு  Jimmy Hugo என்ற ஒரு ஆண் நபர் காட்டுப் பன்றிகளை வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது ராட்சத தவளை ஒன்றை கவனித்துள்ளார். பின்னர் அந்த தவளையை அவர் பிடித்துள்ளார். அதை தன் காலில் வைத்திருக்கும் போது ஒரு குழந்தையை தூக்கி வைத்திருப்பது போல் தோற்றமளிக்கிறது.

அத்துடன் ஒரு சிறுவன் அந்த தவளையை தன் கையில் தூக்கி வைத்திருக்கும் போது அது கிட்டத்தட்ட ஒரு குழந்தையின் உயரத்திற்கு உள்ளதை பார்க்க முடிகிறது. பொதுவாக அந்த கிராம மக்கள் தவளைகளை கொன்று சாப்பிடுவது வழக்கம். ஆனால் அந்த கிராம மக்கள் இந்த அபூர்வ ராட்சத தவளையைக் கொன்று விடாமல் தங்கள் பகுதியில் உலாவவிட்டு ரசிக்கின்றனர்.

Categories

Tech |