சென்னையில் உள்ள பெட்ரோல் பங்கில் பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 8 பேரிடம் 5 நாள் கடுங்காவல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை தாம்பரத்தை அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த 14ம் தேதி அன்று 9 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெட்ரோல் நிரப்ப பணம் தர மறுத்து கத்தியுடன் ரகளை செய்ததோடு அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினர். பொது மக்கள் மத்தியில் பயமின்றி பட்டாகத்தியை எடுத்து மீரட்டியவர்களை கண்டு அங்கிருந்தவர்கள் பயந்து ஓடினர். ஆனால் ஒருவர் மட்டும் தைரியத்துடன் இச்சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து வலை தளத்தில் பரவ செய்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து பீரிக்கன்கரனை காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த கும்பலில் 8 பேர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கடந்த 16ஆம் தேதி சரணடைந்தனர். அவர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தருமாறு பீரிக்கன்கரணை காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அதன்படி, 8 பேரையும் 5 நாள் கடுங்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.