தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து காரில் கடத்தி நகைகளை பறித்துக்கொண்டு நிர்வாணமாக புகைப்படம் எடுத்து மிரட்டி வந்த நாசகார கும்பல் பிடிப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அடுத்துள்ள பூவிளத்தூர் செல்லும் சாலையில் வீரவனூரை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய உறவினருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வழியாக காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென இருவரையும் காரில் கடத்தி சென்று அந்த பெண் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் கைப்பையில் வைத்திருந்த பணம் ஆகியவற்றை பறித்தது மட்டுமில்லாமல், ஓடும் காரிலேயே அவருக்கு பாலியல் தொல்லை அளித்து படமெடுத்து வைத்துக்கொண்டு பின் இருவரையும் கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., வருண்குமாருக்கு போனில் நடந்ததை தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பரமக்குடி டி.எஸ்.பி சங்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது..
இந்த அதிரடி விசாரணையில் பரமக்குடி பொன்னையாபுரத்தை சேர்ந்த முகம்மது சீதக்காதி(36), பொட்டிதட்டி காலனியைச் சேர்ந்த இளஞ்செழியன்(23), முத்துவயல் வடக்குத்தெருவைச் சேர்ந்த சேதுபாண்டி (24), முத்துசெல்லாபுரத்தைச் சேர்ந்த தனசேகரன்(30), அரவிந்த்(25) மற்றும் காளிதாஸ் (25) ஆகியோர் இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியாக இருக்கும் பெண்களை தொடர்ந்து கண்காணித்து அவர்களிடம் நெருக்கமாக பழகி தொடர்பை ஏற்படுத்தி கொண்டு, போட்டோ எடுத்துவிட்டு பின் அவர்களின் போட்டோக்களை நிர்வாணமாக மார்பிங் செய்து சமூகவலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பது மட்டுமில்லாமல் பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளனர்..
இன்னும் சில பெண்களை கடத்தி அவர்களின் நகைகளை பறித்துவிட்டு அரை நிர்வாணமாக்கி போட்டோஸ் எடுத்துக்கொண்டு, போலீசில் புகார் கொடுத்தால் இணையத்தில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டியுள்ளனர்.. இதனால் பல பெண்கள் பயந்துபோய் புகார் கொடுக்கவில்லை..
இது போன்ற போட்டோக்கள், 3 பவுன் தங்க நகை, ரூ.10,000 ரொக்கம், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.. மேலும் பெண்களை குறித்து வைத்து குற்றத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.