பிரிட்ஜில் இருந்து பாஸ்தாவை எடுத்து சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ரெஃப்கா. வெயிட்டராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த வாரம் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின்னர் பிரிட்ஜில் இருந்து பாஸ்தாவை எடுத்து சாப்பிட்டுள்ளார். ஆனால் பிரிட்ஜின் உள்ளே இறால் இருந்ததை கவனிக்காமல் அப்படியே சாப்பிட்டதால் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் உதவியை நாட, அவர்கள் மருத்துவ குழுவை அழைத்தனர். ஆனால் அதற்கு முன்பாகவே ரெஃப்கா மயங்கி விழுந்தார்.
இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார் பத்து வருடங்களாக இத்தாலியில் வெயிட்டராக பணிபுரிந்து வரும் ரெஃப்கா 8 மாத குழந்தைக்கு தாய் ஆவார். இச்சம்பவத்தின் போது அவரது கணவர் வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரெஃப்கா மரணம் பிரிட்ஜில் இருந்து அப்படியே எடுத்து சாப்பிடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.