காதல் திருமணம் செய்த எட்டு மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சேர்ந்த அவினாஷ் கமல் பிரீத் தம்பதியினர் காதலித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு கணவரின் தாய் பிரித்யை கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் பிரீத் குடும்பத்தினரால் மீட்கப்பட்டுள்ளார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றியபோது ப்ரீத்தின் கையில் வெட்டுக் காயங்கள் இருந்ததை பார்த்துள்ளனர் .
மேலும் அவரது அறையில் சோதனை செய்தபோது அவர் கைப்பட “எனது விருப்பத்தோடு தான் தற்கொலை செய்து கொண்டேன். இதற்காக எனது மாமனார் மாமியார் மற்றும் கணவரை எந்த தொந்தரவும் செய்ய வேண்டாம் ஐ லவ் யூ பாபு” என எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளது. அதே நேரம் ப்ரீத்தின் பெற்றோர் கூறுகையில் எங்கள் மகளை அவளது மாமியார் கொடுமைப்படுத்தி வந்தார். எனவே அவர் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என தெரிவித்துள்ளனர். அவர்களது சந்தேகத்திற்கு ஏற்ப ப்ரீத்தின் கைகளில் பல காயங்கள் இருந்ததால் காவல்துறையினருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தங்கள் விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.