Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்பா மகள் பாசத்தை பாருங்க…. உயிருக்கு ஆபத்தான நிலையில் தந்தை…. மகள் செய்த அதிர்ச்சி செயல்….!!

தன்னுடைய தந்தைக்கு இதயத்தையும் கல்லீரலையும் தானமாக கொடுக்கும் முடிவெடுத்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூர் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற ஒரு மகள் இருந்தார். இவர் பிகாம் படித்துள்ளார். பவித்ரா ஒரு வழக்கில் கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன்பின் சில மாதங்கள் கழித்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு தனது தாய் தந்தையருடன் வசித்து வந்தார். இந்நிலையில் பாஸ்கருக்கு திடீரென உடல்நிலை மோசமானதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு டாக்டர்கள் பாஸ்கருக்கு சிகிச்சை அளித்தபோது மஞ்சள் காமாலை தீவிரமடைந்து அவருடைய கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதயத்தில் துளை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பவித்ரா தன் அப்பாவுக்கு கல்லீரல் மற்றும் இதயத்தை தானமாக கொடுக்க முடிவெடுத்துள்ளார். அதன்படி ஒரு கடிதத்தை எழுதி விட்டு தற்கொலை செய்துள்ளார்.

அந்த கடிதத்தில் பவித்ரா எழுதியிருந்ததாவது “எனது இதயம் மற்றும் கல்லீரலை எனது தந்தைக்கு கொடுங்கள். நான் உங்களை காப்பாற்றுவேன் அப்பா. எங்கே தேடினாலும் எனக்கு உங்களை மாதிரி அப்பா அம்மா கிடைக்க மாட்டாங்க. நான் குற்றவாளியே நிரபராதி இனிமேல் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை” என்று உருக்கமாக எழுதியுள்ளார். இந்நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |