போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதற்கான சிறப்பு முகாம்கள் மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை மண்டல தலைமை போக்குவரத்து கழக அலுவலகம், எல்லிஸ் நகர், புதூர், மதுரை நகர், பொன்மேனி, திருப்பரங்குன்றம், பசுமலை, மேலூர் போக்குவரத்து கழக அலுவலகம் போன்ற இடங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்த பரிசோதனை முகாம் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் நடத்தப் பட்டவையாகும். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.