சாக்கு பையில் கிடந்த துப்பாக்கியால் திருநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் திருநகர் பகுதியில் செந்தில்குமார் என்ற ஆடிட்டர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பின்புறத்தில் காலியிடத்தில் சாக்குப்பை ஒன்று கிடந்துள்ளது. உடனே அது என்னவென்று பார்ப்பதற்காக செந்தில்குமார் சாக்கு பையை பிரித்துள்ளார். அப்போது அந்த சாக்குப்பையில் 3 அடி நீளமுள்ள துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது.
இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர். மேலும் துப்பாக்கியை வீசியது யார்? என்ன காரணத்திற்காக வீசியுள்ளனர்? யாருடையது? என்பது குறித்து இன்னும் தெரியவரவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.