Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஒரு தலைகாதல்” செல்போன் டவரில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை… வைரலாலாகும் வாட்ஸ் ஆப் வீடியோ..!!

சேலம் அருகே ஒருதலைக் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இளைஞர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 சேலம் மாவட்டம் இரட்டை பாலத்தை சேர்ந்தவர் ரவி சங்கர்.  கோவையில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வந்த இவர், ஈரோட்டைச் சேர்ந்த பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.  இதற்கு அந்தப் பெண்ணின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த ரவிசங்கர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவு செய்தார்.

Image result for செல்போன் டவர் தற்கொலை

அதில் தான் காதலித்த பெண்ணின் குடும்பத்தினர் அருள் ரமேஷ் என்ற ரவுடியை வரவைத்து மிரட்டியதாக கண்ணீர் மல்க தெரிவித்துவிட்டு செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் காதலித்த பெண்ணின் குடும்பத்தினரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரவிசங்கரின் கோரிக்கை  வைத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |