Categories
உலக செய்திகள்

இந்த நாட்டுல… கொரோனாவால் 40,000 பேர் செத்துடுவாங்க… எச்சரிக்கும் சுகாதார நிபுணர்..!!

இங்கிலாந்து நாட்டில் கொரோனா முதல் அலையில் 40 ஆயிரம் பேர் பலியாகும் அபாயம் இருப்பதாக சுகாதார நிபுணர் எச்சரித்துள்ளார். 

உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இங்கிலாந்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு  847 பேர் கொரோனா தொற்றால்  உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மருத்துவமனைகளில் மட்டுமே.. ஆகையால்  பராமரிப்பு இல்லங்கள் மற்றும் முதியோர் காப்பகம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள இறப்பு எண்ணிக்கையையும் மொத்தமாக சேர்த்தால், பலி எண்ணிக்கை மேலும் கூடுதலாக அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.

இங்கிலாந்தின் முதியோர் இல்லங்களில் மட்டும் இதுவரை 1,400 பேர் கொரோனா தொற்றுக்கு இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது . ஆனால் 7,500 பேர் வரை இறந்திருக்க கூடும் என ஒரு தகவல் தெரிவிக்கின்றது. அதுமட்டுமில்லாமல்  நாட்டில் கொரோனா தொற்றுக்கான முதல் அலை முடிவதற்குள் பலியானவர்களின்  எண்ணிக்கை 40 ஆயிரத்தை சந்திக்க நேரிடும் என முன்னணி பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது சுகாதார நிபுணரின் படியே பலி எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. கடந்த புதன் கிழமை நாட்டில் பலி  எண்ணிக்கை 761 ஆகவும், நேற்று முன்தினம் (வியாழன்) 861 ஆகவும், நேற்று (வெள்ளி)  847 ஆகவும், இருக்கிறது.. இதனால் தற்போது இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,576-ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,08,692 ஆக அதிகரித்துள்ளது..

Categories

Tech |