தந்தை பெரியாரின் 49-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னையில் மலர் வணக்க நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வுக்கு பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, நாங்கள் திராவிடம் என்பதை எதிர்க்கிறோம். தமிழர்கள் அல்லாதோர் வாழ்வதற்கும், ஆள்வதற்கும் வசதியாக கொண்டுவரப்பட்டது தான் திராவிடம். இன்று தமிழக அமைச்சரவையில் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட 9 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது எங்களுக்கு இவ்வளவு பெரிய முன்னுரிமை அங்கீகாரம் கொடுத்தது உண்டா?. இதை பார்க்கும்போது இன்னும் விஜய நகர பேரரசு ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக தான் எங்களுக்கு தோன்றுகிறது. தந்தை பெரியாருக்கு 100 கோடி மதிப்பீட்டில் சிலை வைப்பது தொடர்பாக கேட்கிறீர்கள். இதற்கு நான் என்ன சொல்வது. முதலில் பெரியாரின் கருத்துக்களை மக்களிடத்தில் பரப்ப வேண்டும்.
அவருடைய கருத்தை பரப்புவதற்கு திராவிடம் என்கிற பெயர் தேவையில்லை. நான் கூட 15 வருடங்களாக பெரியாரின் கருத்தியலை பேசியுள்ளேன். சர்தார் வல்லபாய் படேலுக்கு 3000 கோடியில் சிலை வைத்ததற்கும் பெரியாருக்கு 100 கோடியில் சிலை வைப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. இந்நிலையில் தன் மீது வீசப்பட்ட செருப்புகள், பெயர் வைத்தால் காசு, படம் எடுத்தால் காசு மற்றும் வீட்டிற்கு சாப்பிட வந்தால் காசு என வசூலித்து பள்ளிக்கூடங்களை கட்டியவர் பெரியார். இப்படிப்பட்ட பணத்தில் உருவானது தான் தந்தை பெரியார் திடல் என்று அறக்கட்டளை. மேலும் அப்படிப்பட்ட எளிமையான ஒருவருக்கு 100 கோடியில் சிலை வைத்தால் தடியால் அடித்தே உங்களை கொன்றுவிடுவார் என்று கூறியுள்ளார்.