Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவால் இறந்த மனைவி…. தனிமையில் வாடிய கணவர்…. இறுதியில் எடுத்த முடிவு….!!

மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி பகுதியில் அய்யாசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மனைவி இறந்த சோகத்தில் அய்யாசாமி மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனையடுத்து தனது வீட்டில் அய்யாசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பங்களாபுதூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |