கேரள பாதிரியார் ஒருவர் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கோட்டயில் கோவிலகம் என்ற பகுதியில் ஹோலி கிராஸ் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயம் மிகவும் பழமை வாய்ந்தது. இதன் அருகில் 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் படித்து வரும் 9 வயதுள்ள மூன்று சிறுமிகள் தேவாலயத்தின் பாதிரியார் ஜார்ஜ் படயட்டி (வயது 68) என்பவரிடம் ஆசிர்வாதம் வாங்க சென்றபோது அவர் அந்த சிறுமிகளை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி அந்த மூன்று சிறுமிகளில் ஒரு சிறுமி பெற்றோரிடம் நடந்ததை கூற, அதன் பிறகு பெற்றோர் ஹெல்ப் லைனுக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.