Categories
தேசிய செய்திகள்

காதல் விவகாரம் : காதலன் ஆணவக்கொலை “10 பேருக்கு இரட்டை ஆயுள்” நீதிமன்றம் அதிரடி..!!

காதல் விவகாரத்தில் இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது .

கேரள மாநிலம் கோட்டயத்தில் பட்டினத்தைச் சேர்ந்த ஜோசப் கெவின் என்பவர்  கல்லூரியில் படிக்கும்போது நீனு  என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். நீனு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்தினர் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். குடும்பத்தின் எதிர்ப்பை மீறி இந்த ஜோடி கடந்த ஆண்டு மே மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டது.

Related image

இதனால் ஆத்திரமடைந்த நீனுவின் குடும்பத்தினர் கெவின் வீட்டை சூறையாடினர். மேலும் கெவின் மற்றும்  அவரது நண்பனான அனீஷையும்  காரில் கடத்திச் சென்றனர்.  செல்லும் வழியில் இடைவெளியில் அனீஷை கடுமையாக தாக்கி விட்டு இறங்கி விட்டனர். ஆனால் கெவினை இறக்கி விடவில்லை.  மறுநாள் கொல்லம்  ஓடை அருகே சடலமாக கிடந்தார். இதனையடுத்து பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.

Image result for A Kerala court has sentenced 10 people to life imprisonment for the murder of a youth.

பின்னர் காவல்துறையினர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 14 பேர் மீது வழக்குப்பதிவு  செய்தனர். இவ்வழக்கு கோட்டயம்  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் விசாரணை நிறைவு பெற்று, குற்றஞ்சாட்டப்பட்ட 14 பேரில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பை வழங்கியது. இதில் நீனுவின் சகோதரனுக்கு தண்டனை வழங்கப்பட்டது. அவரது தந்தை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

Related image

தண்டனை விதிக்கப்பட்ட 10 பேரும் ஆயுள் தண்டனையே ஏக காலத்துக்கும் அனுபவிக்க வேண்டும் என்றும்,  ஒவ்வொரு குற்றவாளியும்  40 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அந்த அபராதத்தில்  இருந்து நீனுவுக்கும், கெவின் அப்பாவுக்கும்  தலா 1.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும், அதே போலக் கெவினின் நண்பர் அனீசுக்கு  1 லட்சம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்..

Categories

Tech |