அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை ஒன்றைக் கோடி கழக தொண்டர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் என எட்டப்படி கே.பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சட்ட விதிகளின்படி 11/7/2022 அன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இதை ஒன்றரை கோடி கழகத் தொண்டர்கள் சார்பாக வரவேற்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
உண்மை உறங்கும் நேரம், பொய்மை இறகை கட்டி, வாய்வு வேகத்தில் உலா வரும் என்று சொல்வார்கள். நம்மையெல்லாம் ஆளாக்கிய கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நம்மையெல்லாம் வாழ வைத்திருக்கின்ற இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தொண்டர்களையும், தீய சக்தி விடியா திமுக அரசின் அராஜகத்தில் இருந்து தமிழக மக்களை காக்கும் அறப்போரில் முழு மனதோடு ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாக இந்த அரும் பணிகளுக்கு தடையாக உடனிருந்து கொல்லும் வியாதிகளாக நம் இயக்கத்தால் வாழ்வு பெற்ற, சில சுயநல விஷமிகள் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததையும், அவர்களின் கெடுமதிகளை முறியடிக்க தூய்மையான மனதோடு நீதி, நேர்மை, நாணயம் என நம்பி தமிழக தொண்டர்களின் முழு ஆதரவோடும் போராடி வருவதையும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இன்றைய தினம் தர்மம் நீதி வென்றிருப்பதாக கூறியுள்ள 23/6/2022 அன்று கழகப் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்றும், அதேபோன்று 11/7/2022 அன்று கழக சட்ட விதிகளின்படி நடைபெற்ற கழகத்தினுடைய அந்த சிறப்பு பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதே நேரத்தில் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், அறிவிப்புகளும், முடிவுகளும், செல்லும் என்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை மிகுந்த மணமகிழ்ச்சியோடு வரவேற்பதாக அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இந்த சட்ட போராட்டத்தில் தன்னோடு துணை நின்ற தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சட்ட வல்லுநர்கள், கழகத்தினுடைய பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரக்கூடிய நிர்வாகிகள் அனைவருக்கும் கோடிக்கணக்கான தமிழகத்தின் அடிப்படை தொண்டர்களில் ஒரு ஒருவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார். நீதியும் தர்மமும் வென்றிருப்பதாக அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மாண்புமிகு கழக இடைக்காலப் பொது செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. pic.twitter.com/gSQDOdAy1t
— AIADMK (@AIADMKOfficial) September 2, 2022