கோல்ப் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் கண்முன்னே பெண் ஒருவர் தன்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் மேற்கு யார்க்ஷையர் பகுதியில் Bradford நகரில் நேற்று காலை விடுமுறையை கொண்டாடுவதற்காக கோல்ப் விளையாடி கழிப்பதற்காக மைதானத்தில் மக்கள் கூடியிருந்தனர். அந்த சமயத்தில் 9:15 மணிக்கு ஒரு பெண் தன் மீது பெட்ரோலை ஊற்றி கொண்டு தீயை வைத்துள்ளார். இதனை கண்டதும் அங்குள்ள மக்கள் மருத்துவ உதவி குழுவினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தகவலறிந்து மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த பெண் பரிதாபமாக தீயில் கருகி உயிர் இழந்துள்ளார். அந்தப் பெண் யார்? எதற்காக இப்படி செய்தார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோல்ப் விளையாடுவதற்காக மைதானத்தில் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் இதனை கண்டதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.