Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு இந்தியர் தலையிலும் ரூ. 1 லட்சம் கடன்…. மத்திய அரசின் மொத்த கடன் குறித்த தகவல் வெளியீடு….!!

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் வரை மத்திய அரசின் ஒட்டு மொத்த கடன்‌‌ ரூ. 147.19 லட்சம் கோடி என மத்திய நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த கடனை நாட்டின் மக்கள் தொகையுடன் கணக்கிட்டு பார்த்தால் இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் 1,05,000 ரூபாய் கடனாளியாக இருப்பர். இந்நிலையில் மத்திய அரசின் கடன் தொகையை மொத்த மக்கள் தொகையுடன் கணக்கிடும்போது ஒவ்வொரு இந்தியரும் 1,05,000 ரூபாய்க்கு கடனாளியாக இருக்கிறார்கள்.

இதே மாநில அரசுகள் வாங்கிய கடன்களை எல்லாம் கணக்கிட்டால் ஒவ்வொரு நபருக்கும் எவ்வளவு கடன் இருக்கும் என்பதே தெரியவில்லை. கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் 79.09 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த செப்டம்பர் மாதம் 81.55 ஆக சரிந்துள்ளது. மேலும் இந்தியாவில் ரிசர்வ் வங்கியும் ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்

Categories

Tech |