கடலூரில் மதத்தை போதிக்கும் வகையில் மாணவர்களுக்கு கையேடு வழங்கப்பட்டதால் சர்சை எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ளது ஈடன் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவனவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் தற்போது எழுந்துள்ள புகார் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கையேட்டில் குறிப்பிட்ட மதத்தை மாணவர்களின் மனதில் பதியவைக்கும் முயற்சி தற்போது அம்பலமாகியுள்ளது.
மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகளை குறிப்பிடுவதற்காக கொடுக்கப்பட்ட அந்த கையேட்டில் இறுதி பக்கத்தில் எ பார் ஆதாம், பி பார் பைபிள் என்று அச்சிடப்பட்டு இருந்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அதில் A பார் ஆப்பிள், B பார் பால், C பார் கேட் என்ற அர்த்தமெல்லாம் மாற்றப்பட்டு A பார் ஆதாம், B பார் பைபிள், C பார் கிறிஸ்து, I பார் இம்மானுவேல், J பார் ஜீசஸ் என்று அச்சிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை சுகிர்தா கூறும் போது , அது தெரியாமல் நிகழ்ந்த தவறு என்றும் , அந்த கையேட்டில் உள்ள அந்த சர்ச்சைக்குரிய வாக்கியங்களை அனைத்தையும் கிழித்து நீக்கி விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் பள்ளியில் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.