Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுல தான் நிறையா பணம் வருது…! C.M ஸ்டாலினுக்கு மனசு வரல – கொளுத்தி போட்ட எடப்பாடி ..!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை  தடை செய்வதற்கு சட்டம் கொண்டு வந்தோம். சட்டமன்றத்தில் நிறைவேற்றினோம், தடை செய்தோம். ஆனால் ஆன்லைன் ரம்மி நிர்வாகம் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு போட்டார்கள், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, திமுக ஆட்சிக்கு வந்தது. அந்த நீதிமன்றத்தில் முறையாக வாதாடாத காரணத்தினால்  ஆன்லைனில் ரம்மி சூதாட்ட நிறுவனத்திற்கு சாதகமாக போச்சு.  அப்போது இப்போது இருக்கின்ற சட்டத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

4 மாதத்தில் புதிய சட்டம் கொண்டு வந்து, இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்துவோம். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்வோம் என்று அவரே பேட்டி கொடுத்தார். ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது, ஒன்றும் காணோம். அதற்கு குழு போடுகிறார்கள்…  என்னவென்று ? மக்களிடத்தில் கருத்து கேட்கிறார், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டுமாம். எங்கேயாவது சூதாட்டத்திற்கு கருத்து கேட்டு கூட்டம் நடத்துவது வரலாறு உண்டா? யாராவது ஆன்லைன் ரம்மி சூதாட்டம் ஆடி பழக்கம் இருக்கிறதா? நமக்கு…

மூன்று சீட்டில் ரம்மி ஆடுகிறீர்களா? ஆறு சீட்டில் ஆடுகிறீர்களா ? 13 சீட்டு விளையாடுகிறீர்களா ? இதற்கு ஒரு கருத்து கேட்பு  கூட்டம் நடத்தணுமாம் மக்களிடத்தில்… பிறகு இதனை  நடைமுறைப்படுத்துவாராம். ஏனென்றால் அதில் நிறைய பணம் வருகிறது. அதனால்  ஆன்லைன் ரம்மி  சூதாட்டத்தை தடை செய்வதற்கு மனமில்லை. இப்போது இருக்கின்ற முதலமைச்சருக்கு மனம் இருந்தால் உடனடியாக அவசர சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி,  சட்டமன்றத்தில் அந்த சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றி,  தடை செய்திருக்கலாம்.

இன்னும் தடை செய்யவில்லை. இன்றைக்கு இளைஞர்களும், மாணவர்களும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு பல பேரும் உயிர் இழந்து விட்டார்கள். விலை மதிக்க முடியாத உயிர் நம்மை  விட்டு போய்விட்டது. பல பேர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் விளையாடி சொத்தை இழந்து,  நடுரோட்டில் செல்கிறார்கள், சில பேர் திருடுகிறார்கள். இதையெல்லாம் அன்றாடம் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வந்த செய்தி. இன்னும் மனம் இறங்கவில்லை. ஆகவே இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கொஞ்சமாவது மனதில் ஈரம் இருந்தால் உடனடியாக இந்த முதலமைச்சர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்வதற்கு அவசர சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி, இதை தடுத்து நிறுத்த வேண்டும். மக்களைப் பற்றி அக்கறை இல்லாத முதலமைச்சர் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

Categories

Tech |