தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களை நடித்து முன்னணி நடிகையாக திகழ்பவர் பழம்பெரும் நடிகை லட்சுமி. இவர் இறந்துவிட்டதாக காலை முதலே செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இதனால் நடிகை லட்சுமிக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது நான் நலமுடன் தான் இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதனால் நடிகை லட்சுமி இறந்தது வதந்தி என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகை லட்சுமி ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு அதிகாலையில் இருந்து நிறைய பேர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்கள். எனக்கு இன்று பிறந்தநாள் கூட இல்லையே என்று நான் யோசித்தேன். அதன் பிறகு தான் நான் இறந்து விட்டதாக செய்திகள் வருவது எனக்கு தெரிய வந்தது.
இதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்பட போவது கிடையாது. ஏனா எல்லோரும் பிறந்தா கண்டிப்பா ஒரு நாள் இறந்து தான் ஆகணும். இருப்பினும் என்னை பற்றி தவறான செய்திகளை பார்க்கும்போது சிலர் திருந்தவே மாட்டாங்கனுதான் தோணுது. மேலும் எனக்கு நலம் விசாரித்து போன் செய்த அனைவருக்கும் நன்றி. நான் தற்போது இறைவன் அருளால் உடல் ஆரோக்கியம் பெற்று நலமாக இருக்கிறேன். உங்களுடன் பேசும் இந்த நேரத்தில் தற்போது கடையில் ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.