Categories
உலக செய்திகள்

அந்த நிலநடுக்கத்தின் தாக்கமா..? 6.9 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 6.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 6.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் Chinik நகரின் கிழக்கே 29 மைல் ஆழத்தில், 76 மைல் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளது. மேலும் அலாஸ்கா நிலநடுக்க ஆய்வு மையம் இந்த நிலநடுக்கம் கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கம் அல்லது அந்த நிலநடுக்கத்தை தொடர்ந்த சிறு நில அதிர்வாகும் என்று தெரிவித்துள்ளது.

அதாவது அமெரிக்காவில் 50 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி அலாஸ்காவில் 8.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஹவாய் தீவில் நேற்று முன்தினம் 6.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க நிலவியல் ஆய்வுத்துறை மிகப்பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு இதுபோன்ற சிறு சிறு நில அதிர்வுகள் பல மாதங்கள், பல வாரங்கள், ஆண்டுகள் கூட தொடரலாம் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Categories

Tech |