திருப்பத்தூர் மாவட்டம் பள்ளி பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகின்றார். அதே பகுதியில் கொத்தூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர்கள் இருவருமே உறவினர்கள் ஆவர். இவர்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அதனை மனதில் வைத்துக் கொண்டு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் முருகன் தனது கை துப்பாக்கியை காட்டி அண்ணாதுறையை மிரட்டி உள்ளார். பின்னர் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் அண்ணாதுரைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அண்ணாதுரை உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து இருவரும் நாட்டறம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து அண்ணா துரையை தாக்கிய முருகனை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல் முருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அண்ணாதுரை மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.