Categories
தேசிய செய்திகள்

ஒருமுறை கடித்த பாம்பை… இருமுறை கடித்த நபர்… அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர், பாம்பு தன்னைக் கடித்தவுடன் ஆத்திரத்தில், அதைப் பிடித்து 2 முறை கடித்த விநோத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், கசாபே தவாண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள், ஊருக்குள்‌ சுற்றித் திரிந்த பாம்பு ஒன்றைப் பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.. பல முறை பாம்பை பிடிக்க முயன்றும் தோல்வியிலேயே முடிந்ததால், அதே கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் கச்ரு கிலாரே என்ற நபர் உதவி செய்வதற்கு வந்துள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத நேரத்தில் பாம்பு அவரைக் கடித்துள்ளது. இதனால், கடும் ஆத்திரமடைந்த சஞ்சய், பாம்பைப் பிடித்து 2 முறை கடித்துவிட்டு பைக்குள் போட்டு எடுத்துச்சென்றுள்ளார்.

அந்த இடத்திலிருந்து புறப்பட்ட சஞ்சய், ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் உடனடியாக பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடல் நிலை சீராக உள்ளதாகவும், பாம்பு விஷத்தை வெளியேற்றவில்லை எனவும் தெரிவித்தனர்.

Categories

Tech |