சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னநூல் அள்ளி கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டின் அருகில் கர்நாடக மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரிடமிருந்த 38 கர்நாடக மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சின்னசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.