அரசு அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கியால் வேட்டையாடிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காட்டுக்கொல்லை பகுதியில் சிலர் நாட்டு துப்பாக்கி வைத்து விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அரசு அனுமதியின்றி வீட்டில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியையும், வெடிமருந்துகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.