இந்நிலையில் அந்நாட்டின் கானோ மாகாணத்தில் டங்கோரா (Dangora) என்ற நகரத்தில் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 40 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்ப்பட்டது, பெண்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மக்கள் அனைவரும் இதனால் பெரும் அச்சத்தில் இருந்தனர். தற்போது அந்த கொடூரச்செயல்களில் ஈடுபட்டு வந்த கொடூர குற்றவாளி பிடிபட்டுள்ளான்.
முஹம்மது சுல்பரா’அல்ஃபா (Muhammad Zulfara’u Alfa) என்ற அந்த கொடூரன் 10 வயது சிறுமிகள் தொடங்கி 80 வயது பாட்டி வரையிலான பெண்களை வன்கொடுமை செய்திருப்பது தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த குற்றவாளி, அங்குள்ள ஒரு வீட்டில் நுழைந்து பெண் குழந்தைகளின் படுக்கையறைக்கு சென்று பலாத்காரம் செய்ய முயன்றபோது, அந்தக் குழந்தைகளின் தாயார் அவனை தைரியமாக துணிச்சலுடன் மடக்கிப்பிடித்து காவல்துறையினரை வரவழைத்தார். அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த கொடூரனை கைது செய்தனர்.
அவன் கைது செய்யப்பட்டிருப்பதை அந்த நகர தலைவர் அகமது யாவ் (Mallam Ahmadu Ya’u) வரவேற்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், “டங்கோரா நகர பொதுமக்கள் இப்போது மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்கள். அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்குமே சரியான வகையில் நீதி வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” என கூறினார்.
உள்ளூர் மக்கள் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “கடந்த ஒரு ஆண்டுகளாக நாங்கள் தங்களது சொந்த வீடுகளிலேயே மிகுந்த பயத்துடன் வாழ்ந்து வந்தோம். தொடர்ந்து அந்த கொடூர குற்றவாளி வேலி தாண்டி உள்ளே வந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது எங்களுக்கு அச்சத்தை தந்தது. அவன் கைது செய்யப்பட்டு விட்டதால் இனி நாங்கள் நிம்மதியாக உறங்க முடியும்” என கூறினர்.