Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உறவினர் ஒருவரால்… பெண்ணுக்கு நடந்த கொடூரம்… கைது செய்த மகளிர் காவல் துறையினர்…!!

தனது உறவினரையை பாலியல் பலாத்காரம் செய்த ஒருவரை மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் பகுதியில் 21 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது கணவர் இருங்காட்டுக் கோட்டையில் அமைந்திருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதால் அவர் அப்பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இதனையடுத்து கணவன் மற்றும் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் அதை உறவினர் மணி தீர்த்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்பின் அந்தப் பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் மணி வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருக்கும் போது அருகில் இருந்த ஒரு முட்புதரில் வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இது பற்றி அப்பெண் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் மகளிர் காவல்துறையினர் மணியை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |