Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இடையூறாக இருக்கான்… இனி இருக்கக் கூடாது என முடிவெடுத்தேன்… கைது செய்த காவல்துறையினர்…!!

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த வாலிபரை நாட்டுத் துப்பாக்கியால் கொலை முயற்சி செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொட்டபடகாண்டஅள்ளி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுசிலா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தினேஷ் குமார் என்ற மகன் உள்ளார். இவர் இரவு நேரத்தில் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் தினேஷ்குமாரை சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் தினேஷ் குமாருக்கு வயிற்று மற்றும் கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் கட்டிட ஒப்பந்ததாரராக பணி புரியும் விஜயகாந்த் என்றவர் தான் நாட்டுத் துப்பாக்கியால் தினேஷ் குமாரை சுட்டது என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் வாலிபரை சுட்டு தலைமறைவாக இருந்த விஜயகாந்தை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்துள்ளனர். இதனையடுத்து விஜயகாந்த் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் விரைவாக சென்று விஜயகாந்தை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் காவல்துறையினரிடம் பயத்துடன் தனது வாக்கு மூலத்தை கொடுத்துள்ளார்.

அந்த வாக்குமூலத்தில் தினேஷ் குமாரின் தாயார் சுசீலாவுக்கு தனக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. பின்னர் தங்களுடைய கள்ளக்காதலுக்கு தினேஷ்குமார் தடையாக இருப்பதாகவும் அதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இரவு நேரத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தினேஷ்குமாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டேன் என விஜயகாந்த் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயகாந்தை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |