நண்பனுக்கு மனைவியை 9 ஆண்டுகளாக தாரை வர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் கே கே நகர் அன்பில் தர்மலிங்கம் நகரை சேர்ந்தவர் தினேஷ் என்ற முகமது அஸ்லாம். இவருக்கு வயது 41 ஆகிறது.. இவரும், மத போதகரான முகமது பாரூக்கும் கல்லூரி காலத்திலிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த 2005 ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்ணான பர்வீன் என்பவரை தீவிரமாக காதலித்ததால் தன்னுடைய பெயரை முகமது அஸ்லாம் என மாற்றிக் கொண்டார்.
இதையடுத்து இருவருக்கும் வெகு சிறப்பாக திருமணம் நடந்தது. அதன்பின் குடும்ப வறுமையில் கணவன் – மனைவி இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன செய்யலாம் என நண்பர் பாரூக்கிடம் அஸ்லாம் ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு பாரூக் நான் உங்கள் வீட்டில் யாகம் செய்கிறேன் குடும்ப பிரச்னை தீர்ந்து நல்ல படியாக வாழலாம் என்று ஐடியா கொடுத்துள்ளார்.
அதன்படி வீட்டுக்கு வந்து மந்திரம் செய்வது போல பாவித்து பிரச்னை உன் மனைவியிடம் தான் உள்ளது. இதனால் தான் பிரச்னை ஏற்படுகிறது.. இதனை சரி செய்வதாக மயக்க மருந்து கலந்த நீரை, புனித நீர் என கூறி உன் மனைவி பர்வீனிடம் தனி அறையில் வைத்து கொடுக்குமாறு பாருக் அஸ்லாமிடம் கொடுத்துள்ளார்.. அதன்பின் அதை குடித்த பர்வீன் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழ, அவரை பாலியல் வன்கொடுமையை செய்ததுடன் அதனை புகைப்படமும் எடுத்துக் கொண்டார் பாரூக்.
பின்னர் வன்கொடுமை செய்யப்பட்டதை உணர்ந்த பர்வீன் உடனே ஃபாரூக்கின் மனைவி பாத்திமாவிடமும், கணவரின் தங்கை எரமிடமும் கூறி கதறியழுதுள்ளார். ஆனால் இருவரும் பாரூக் என்ன சொல்கிறாரோ, அதன்படி தான் செய்ய வேண்டும் என பர்வீனிடம் கூற, அவர் அதிர்ச்சியடைந்தார்.
மேலும் காவல் நிலையத்தில் புகாரளித்தால் இணையத்தில் போட்டோவை பதிவிடுவதாகவும் மிரட்டி தொடர்ந்து தனது இச்சையை தீர்த்து வந்துள்ளார்.. இது ஒரு கட்டத்தில் கணவன் அஸ்லாமுக்கு தெரியவர, அவரால் ஒன்னும் செய்ய முடியவில்லை.. உன் மனைவியை அனுப்பிவை என மிரட்ட, அவரும் தாரை வார்த்துள்ளார். அதுமட்டுமின்றி பர்வீன் சேர்த்து வைத்திருந்த 25 சவரன் நகை மற்றும் பணத்தையும் மிரட்டி பெற்றுக்கொண்டார் பாரூக்.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக 2008 ஆம் ஆண்டு பர்வீன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும், ஆனால் வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் நகையை திருப்பி கொடுக்கும்படி அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் நகையை பாரூக் திருப்பிக்கொடுக்காவில்லை.
இதையடுத்து தொடர்ந்து போட்டோவை காட்டி 9 ஆண்டுகளாக வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. அதே சமயம் இது பற்றி பிரச்சனை வெடிக்காமல் இருக்கும் பாரூக் நண்பனுக்கு சரக்கு வாங்கி கொடுத்து மதுபோதையில் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அஸ்லாமின் மூத்த மகளுடன் அத்துமீறி நடக்க முயன்றுள்ளார் பாரூக். இதனால் கடும் ஆத்திரமடைந்த பர்வீன்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாரூக் மற்றும் கணவர் அஸ்லாம் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான அஸ்லாமின் சகோதரி எரம் மாற்றம் பாரூக்கின் மனைவி பாத்திமா இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.